வாக்காளர்களின் அச்சத்தைப் போக்க கொடி அணிவகுப்பு ஊர்வலம்

வாக்காளர்களின் அச்சத்தைப் போக்க கொடி அணிவகுப்பு ஊர்வலம்
X

கொடி அணிவகுப்பு.

வாக்காளர்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக திருச்சி மாநகரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று நடந்தது.

திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்யும் விதமாக திருச்சி மாநகரில் காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் பாலக்கரை பகுதியில் இருந்து எடத்தெரு, கீழப்புதூர் வழியாக சென்று அரசமரம் பஸ் ஸ்டாப் பகுதியில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்திற்கு திருச்சி மாநகர வடக்கு துணை கமிஷனர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டு பேரணியாக வந்தனர்.

மேலும் தேர்தல் அன்று பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story