திருச்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு மனநல ஆலோசனை

திருச்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு  மாணவிகளுக்கு மனநல ஆலோசனை
X
திருச்சியில் முதலாமாண்டு கல்லூரி மாணவிகளுக்கு மன நல ஆலோசனை.

திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு "மன ஆரோக்கியம்" என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி கல்லூரியின் ஆர்.வி.அரங்கில் இன்று நடைபெற்றது. கல்லூரி தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் முனைவர் கோ. மீனா முன்னிலை வகித்தார்.

இதில் ஸ்ரீ ரம்யா மருத்துவமனை, சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனை மனநல ஆலோசகர் டாக்டர்.சுனிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,

குடும்பத்தில் உள்ள நபர்களின், நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்களின் முக்கியத்துவம் குறித்தும், தோல்வி தான் வெற்றியின் முதல் படி என்றும் கூறினார். மேலும் கைப்பேசியின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

பின்னர் சிறப்பு விருந்தினர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவிகளுக்கு அவர் சிறப்பு பரிசினை வழங்கினார். முன்னதாக முதுநிலை மருத்துவமனை நிர்வாகம் துறையைச் சேர்ந்த முனைவர் வாசுகி வரவேற்றார்.

நிறைவாக முதுநிலை சமூகப்பணித் துறையைச் சேர்ந்த முனைவர் செண்பகம் நன்றி கூறினார். இதில், கல்லூரி முதல்வர் முனைவர் வித்யாலட்சுமி உட்பட இளநிலை முதலாமாண்டு மாணவிகள் 700 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர் .

Tags

Next Story