திருச்சியில் முதன் முறையாக மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சியில் முதன் முறையாக  மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி
X
திருச்சியில் முதன் முறையாக மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற உள்ளது.

திருச்சி மாநகர் கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபில் கிளப் கடந்த 31.12.2021-ந்தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

திருச்சி மாநகர ரைபிள் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர். மேற்படி ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடு தளமும் 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 10 மீட்டர் தூரத்தில் மூன்று சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஒன்றும் உள்ளது.

இக்கிளப்பில் வருகின்ற 24.07.2022 முதல் 31.07.2022 வரை தமிழ்நாடு மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டிகள் - 2022 திருச்சி மாநகர கே.கே.நகர்ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபிள் கிளப்பில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 1500 வீரர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டி தொடர்பான அறிவிப்பை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டு உள்ளார். அப்போது திருச்சி ரைபிள் கிளப் செயலாளர் செந்தூர்செல்வன் மற்றும் பொருளாளர் சிராஜீதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai and business intelligence