திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமத்தின் முதல் ஆலோசனை கூட்டம்

திருச்சி வளர்ச்சி குழுமத்தின் ஆலோசனை கூட்டத்தில் என்.எஸ். திலீப் பேசினார்.
திருச்சிராப்பள்ளி வளர்ச்சிக் குழுமத்தின் (திருச்சி மாவட்ட சேவை சங்கங்கள் & சமூக ஆர்வலர் கூட்டமைப்பு)ஆலோசனைக் கூட்டம் திருச்சி ஆக்சினா லைகான் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப சோமு, தொழிலதிபர் ஜெயகர்ணா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். மூத்த சமூக ஆர்வலர் சகுந்தலா சீனிவாசன், நீலமேகம், ஆர்.கே. ராஜா, ரஹும், விவேகானந்தன்,பிளட் ஷாம், பால்குணா ஹோப் தினேஷ், காந்தி மார்க்கெட் கமலக்கண்ணன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமம் தலைவராக வழக்கறிஞர் திருச்சி என்.எஸ்.திலீப், செயலாளராக யோகா விஜயகுமார், பொருளாளராக அய்யாரப்பன் உள்ளிட்டோர் திருச்சிராப்பள்ளி சமூக சேவை சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்களால் தேர்வு செய்யப்பட்டார்கள்.
திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழும தலைவர் வழக்கறிஞர் திருச்சி என்.எஸ்.திலீப் பேசுகையில்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொள்வதே திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமத்தின் செயல்பாடுகள் ஆகும். திருச்சி மாவட்ட பகுதிகளில் களப்பணியாற்றி, அதன் அடிப்படையில் அறிக்கைகள் தயாரித்தல். சீர்மிகு நகர்களை உருவாக்கும் திட்டங்களை ஆயத்தம் செய்தல், திருச்சிராப்பள்ளி பேருந்து நிலையம், வணிக வளாகம். வெளி வட்ட சாலை, சுற்று சூழல், நீர்நிலைகளை பாதுகாத்தல், சாலை விரிவாக்கம் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கருத்துக்களை மத்திய, மாநில அரசுகள் மற்றும் அனைத்து துறைகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை உறுப்பினர் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று சீர்மிகு திருச்சிராப்பள்ளியை உருவாக்க செயல்படுவோம். இப்பணிக்காக திருச்சிராப்பள்ளி மாவட்ட குழு மாநகராட்சி, மண்டலம் அளவில் குழு, புறநகர் பகுதியில் சட்டமன்ற தொகுதி அளவில் பொறுப்பாளர்களை நியமிக்க படுவர் என்றார்.
அரசிடம் பரிந்துரைக்க 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பொருளாளர் அய்யாரப்பன் வரவேற்க, செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சமூக சேவை சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் இருநூறுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu