திருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்டது.

திருச்சி தீயணைப்பு துறை சார்பாக நிலைய அலுவலர் மெல்க்யூ ராஜா தலைமையிலும், உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன் முன்னிலையிலும் திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மாணவர்கள்,செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவசர காலத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அதில் இருந்து பதட்டம் அடையாமல் எவ்வாறு தப்பிக்கலாம் என்பது பற்றி ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது நிலைய அலுவலர் மெல்கியூராஜா பேசியதாவது;-

பொதுவாக தீ விபத்துகள் ஏற்படுகின்ற பொழுது பொதுமக்கள் பதட்டம் அடையக்கூடாது. நிதானமாக செயல்பட்டு நம்முடைய உயிரை காப்பாற்ற யோசித்து செயல்பட வேண்டும். மேலும் மருத்துவமனை ஊழியர்களுக்கு முன்பாக கடுமையாக தீ விபத்து ஏற்பட்டால் அந்த விபத்திலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்று தீயிட்டு ஒத்திகை செய்து காண்பித்தோம். பொதுவாக ஆபத்து நேரத்தில் பயம் ஏற்பட்டால் செயல்பாடு குறைந்துவிடும். ஆகவே எந்த ஒரு சூழ்நிலையிலும் பதற்றம் அடையாமல் அதனை வென்று காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா, கண்காணிப்பாளர் டாக்டர் அருண் ராஜ் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!