தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் திருச்சியில் துவக்கி வைப்பு
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் திருச்சியில் துவக்கி வைக்கப்பட்டது.
திருச்சியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரும், சமூக ஆர்வலரும் சித்த வைத்தியருமான டி.எஸ்.பி.என்கிற சீனிவாசபிரசாத் திருச்சி -பாண்டிச்சேரி வரையிலான 2023 ஆண்டு நடமாடும் உயிர்காக்கும் சேவை வாகனம் மூலம் சாலை பாதுகாப்பு, சாலை பயண பாதுகாப்பு, வாகன தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் (27-11-23 முதல் 30-11-23 வரை) துவக்க நிகழ்ச்சி திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திலிருக்கும் காவல்துறை காவல் துணை ஆணையர் அலுவலகம் முன்பிருந்து துவக்கி வைக்கப்பட்டது.
இப்பயணத்தை திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் அன்பு. போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ஜோசப் நிக்சன் வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவரும் திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான கோவிந்தராஜ், சமூக ஆர்வலர் கோவிந்தசாமி, தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மனித விடியல் பி. மோகன், தமிழ் குரல் அறக்கட்டளை தலைவரும் இயற்கை மருத்துவருமான தங்கமணி லிவிங்ஸ்டன் தாஸ் ,சுமித்ரா, ரஃபிக் அகமது சுகுமார் பானுமதி ,ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்க தலைவர் மோகன் ராம் ,அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu