திருச்சியில் தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
திருச்சியில் தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கருவிகளை கையில் எடுத்து இயக்கிய காட்சி.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று (09.10.2023) தொடங்கி வைத்து காட்சிபடுத்தி வைக்கப்பட்டிருந்த கருவிகளை பார்வையிட்டார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து காட்சிபடுத்தி வைக்கப்பட்டிருந்த கருவிகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்த கேட்டறிந்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது தொடர்பாகவும், பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான சிறப்பு உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை காட்சிப்படுத்தி மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு வீரர்கள் மூலம் பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்புப் பணிகள் மேற்கொள்வது என்பது குறித்த செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சரண்யா, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை; மாவட்ட அலுவலர் அனுசுயா, உதவி மாவட்ட அலுவலர் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ், நிலைய உதவி மாவட்ட அலுவலர் சத்தியவர்த்தனன் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் தீ தடுப்பு குழுவினர் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu