வெள்ளத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் திருச்சி தீயணைப்பு மீட்புத்துறை

வெள்ளத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் திருச்சி தீயணைப்பு மீட்புத்துறை
X

வெள்ளத்தை எதிர்கொள்ள திருச்சி தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உபகரணங்களுடன் உள்ளனர்.

வெள்ளத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் உள்ளனர்.

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களில் மிக கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை இயக்குனர் கரண் சின்ஹா உத்தரவின் பெயரிலும்,மத்திய மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் மேற்பார்வையிலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) பானுப்பிரியா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் 9 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அனைத்து நிலையங்களில் உள்ள செயற்கருவிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.நீர்நிலைகள் மற்றும் குளங்களில்குளிக்க யாரும் செல்லக்கூடாதுஎன அறிவுறுத்தப்படுகிறது. நீர்நிலைகள் குளம் குட்டைகளில்வேடிக்கை பார்க்க செல்வது செல்பி எடுப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். அனைத்து இடங்களிலும் மக்களுக்கு போலி ஒத்திகை பயிற்சிமூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 20 பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்கள் உள்ளனர்.அனைவரும் எந்த விதமானஅசாதாரண சூழ்நிலையை எதிர் கொள்ள பயிற்சி பெற்றவர்கள்.வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மக்களை மீட்க ரப்பர் மிதவை உடன் உள்ளது. மேலும் லைப் ஜாக்கெட், டவர் லைட் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மக்கள்தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம். பாம்புகள், விஷவண்டுகள், மரங்கள் ஏதேனும் விழுந்திருந்தால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை எண் 101-க்கு அணுகவும். மாநில பேரிடர்கட்டுப்பாட்டு அறை எண் 1070,மாவட்டபேரிடர் கட்டுப்பாட்டு அறை எண் 1077 தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!