விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மத்திய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மத்திய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

விவசாயிகள் சங்கத்தின் கூட்டம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மத்திய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் கூட்டம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி நாளில் கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் விவசாயிகள் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் முடிவு செய்திருந்தனர். ஆனால் காவல்துறையினர் செல்ல விடாமல் தடுத்ததால், இது சம்பந்தமாக முதல்வர் .ஸ்டாலினை நேரில் சந்திப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஆன்லைனில் நெல் பதிவு செய்து விற்பனை முறையை ரத்து செய்வது, தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோருவது, தாமதமின்றி பயிர்க்கடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும், . 100 நாள் வேலையாட்களை விவசாயிகளின் விவசாய வேலைகளுக்கு அரசு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாநில நிர்வாகிகள் நாககுமார், தட்சிணாமூர்த்தி, மேகராஜன், மகேந்திரன், தங்கமுத்து, மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பரமசிவம், பொன்னுசாமி, ராஜபிரதீப், மதியழகன், ஆண்டவர், சின்னச்சாமி, ஐயப்பன், செந்தில், திருச்சி படையப்பா ரங்கராஜ், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!