பஸ் வசதி கோரி மக்களை திரட்டி போராட்டம் நடத்த விவசாய சங்கம் முடிவு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,திருச்சி மாவட்ட குழு செயலாளார் அயிலை சிவசூரியன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து உறையூா் நாச்சியாா் கோவில்,மருதண்டாகுறிச்சி ,சீராத்தோப்பு,பேரூா்,குழுமணி வழியாக கோப்பு,அயிலாப்பேட்டை நங்கவரம் வரையிலும்,,சத்திரம் பேருந்து நிலையம்,,புத்தூா் 4−ரோடு, சோமரசம்பேட்டை ,குழுமணி வழியாக கோப்பு வரையிலூம் இயக்கப்பட்ட நகர பேருந்துகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு வருகிறது .
இதனால் இக் கிராமங்கள் மற்றும் இதன் சுற்று புற கிராமங்களில் இருந்து நகர பகுதிகளுக்கு பள்ளி,கல்லூாி செல்லும் மாணவ, மாணவிகள்,அன்றாட கூலி வேலைக்கு செல்லும் ஏழை கூலி தொழிலாளா்கள், மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோா்,வியாபாாிகள் என அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து வசதி இல்லாமல் பெரும் அல்லல் பட்டு வருகின்றனா் .குறிப்பாக பெண்கள் இரவு 7-மணியில் இருந்து இரவு 10−மணிக்கு மேலாகியும் உாிய பேருந்து வசதி இல்லாமல் நகர பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று ஊா் திரும்ப பேருந்து வசதி இல்லாமல் சத்திரம் பகுதியில் இரவு நேரத்தில் தவித்து வருகின்றனா்.
இது சம்பந்தமாக சம்பந்தப்ப்பட்ட அலுவலா்களை தொடா்பு கொன்டால் உாிய நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறாா்கள்.ஒரு சிலா் டிரைவா்,கன்டக்டா்கள் பற்றாகுறை என்கிறாா்கள்,பொது மக்கள் மத்தியில் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதித்ததால் பெரும் வருமானம் இழப்பு அதன் காரணமாக சாியான முறையில் கிராமபுற பேருந்துக்கள் இயக்கப்படுவது இல்லை என்ற கருத்துகள் வருகிறது.
எது எப்படி இருந்தாலும் கிராமபுற மாணவ,மாணவிகள்,தினசாி நகா்புறங்களுக்கு வேலைக்கு செல்வோா் நலன்கள் பாதிக்காதவாறு கடந்த காலங்களில் இயக்கப்பட்டவாறு கோப்பு,குழுமணி,அயிலாப்பேட்டை பகுதிகளுக்கு நகர பேருந்துகளை இயக்க வேன்டும். இதே நிலை தொடருமானால் மாா்ச் முதல் வாரத்தில் உண்ணாவிரதம்,சாலை மறியல் ,பேருந்து சிறைபிடிப்பு தொடா் போராட்டங்களை நடத்துவதுயென தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu