திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் நெற்பயிர்களுடன் போராட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் நெற்பயிர்களுடன் போராட்டம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் நெற்பயிர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் நெற்பயிர்களுடன் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் அதவத்தூர் அருகே உள்ள புதுக்குளம் என்ற பகுதியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியினர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அந்த இடத்தை புறம்போக்கு நிலம் என கூறி ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் அங்கிருந்து விவசாயிகளை காலி செய்ய வலியுறுத்துவதாக குற்றம்சாட்டியும், அரசு தன் முடிவை கைவிட வலியுறுத்தியும் அங்கு விவசாயம் செய்பவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பயிர்கள் மற்றும் காய்களை கையில் வைத்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நீதி பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!