டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் மறியல் போராட்டம்
திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
இந்தியாவின் வேளாண்மைத் துறை, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு போல் உள்ளது. ஆனாலும் அரசாங்கத்தால் விவசாயிகள் புறக்கணிப்பப்பட்டு வருகிறார்கள். தொழில் துறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மண்ணை கிண்டி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை.
தற்போது கடுமையான கொந்தளிப்பில் விவசாயிகள் உள்ளனர். டெல்லியின் எல்லைப்புறங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். புதிய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் தூண்டப்பட்ட அநீதி உணர்வும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளுமே அவர்களின் நீண்டகாலப் போராட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயனமா விலை வழங்கவேண்டும் என்பதே அவர்களது முக்கியமான கோரிக்கை ஆகும்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வேண்டியும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு மத்திய பிஜேபி அரசிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதனால், மத்திய பிஜேபி அரசின் மூத்த நிர்வாகள் போராட்ட விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது நேற்று. ஆனால், அதில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் தீர்வு எட்டப்படவில்லை. இதனால், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை பிஜேபி நிர்வாகிகளுக்கு தோல்வியில் முடிந்தது.
இதனால், விவசாயிகள் அறிவித்தபடி தலைநகர் டெல்லியில் இன்று ரயில் மறியல் செய்வதை ஆதரித்தும், கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் திருச்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் சாலையில் படுத்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu