திருச்சியில் 15-ம் நாளாக சங்கு ஊதி, ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் 15-ம் நாளாக சங்கு ஊதி, ஒப்பாரி வைத்து  விவசாயிகள் போராட்டம்
X

திருச்சியில் சங்கு ஊதி, ஒப்பாரி வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தும் விவசாயிகள்.

திருச்சியில் 15வது நாளாக போராட்டத்தில் விவசாயிகள் சங்கு ஊதி, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும். மழையினால் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த 12-ந்தேதி முதல் அடுத்த நவம்பர் மாதம் 26 வரை 46 நாட்கள் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 15-ம் நாளான இன்று மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கவில்லை எனக் கூறி நூதன முறையில் ஒரு விவசாயி இறந்ததை போல நாற்காலியில் உட்கார வைத்து உண்மையாக நடப்பதை போலவே சங்கு ஊதி, மணி அடித்து, ஒப்பாரி வைத்து நூதன உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.

Tags

Next Story
ai solutions for small business