திருச்சியில் விவசாயிகள் உரசாக்கை காலில் மாட்டிக்கொண்டு போராட்டம்
திருச்சியில் விவசாயிகள் காலில் உர சாக்கை மாட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும். மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். மழையினால் அழிந்த விவசாய பயிர்களுக்கு உரிய நஷ்டடு வழங்க வேண்டும். தமிழகத்தில் உர தட்டுப்பாடு நீக்க உடனடியாக மத்திய அரசு உரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மாநில துணை தலைவர்கள் மேகராஜன், கரூர் தட்சிணாமூர்த்தி, சிறுகாம்பூர்பரமசிவம், மாநில செயலாளர்கள் நகர் ஜான் மெல்கியராஜ், லால்குடி தியாகு, மாநில துணை சட்ட ஆலோசகர் முத்துசாமி, மாநில செய்தி தொடர்பாளர்கள் தீராம்பாளையம் பிரேம்குமார், வரப்பிரஹாஸ், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் இராமலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் திருச்சி - கரூர் பைபாஸ் சாலை அருகில் அண்ணாமலை நகர், மலர் சாலையில் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து 46 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தினம் ஒரு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 38-ஆம் நாளான நேற்று காலியான உரச்சாக்கை மாட்டிக்கொண்டு நூதன உண்ணாவிரதம் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu