காற்றில் சரிந்து விழுந்த வாழைகளுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் மனு
காற்றில் ஒடிந்து விழுந்த வாழைகள்.
திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கோடை வெயில் காரணமாக தென்னை மற்றும் வாழை மரங்கள் போதுமான தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. காவிரி ஆற்றின் கரையிலும் தென்னை மரங்கள் கருகி நிற்பதை காண முடிகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூாா்,மணிகன்டம்,தொட்டியம், மண்ணச்சநல்லூா்,லால்குடி பகுதிகளில் ஏறத்தாழ 20,000ஏக்கருக்கு மேற்பட்ட வாழைகள் போதிய தண்ணீிா் இல்லாமல் கடும் வெப்பத்தால் அரை குறை விளைச்சளோடு வதங்கி நிற்கின்றன.காட்டுபுத்தூா் பகுதியில் சூறை காற்றில் ஒடிந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சி தலைவா் கவனத்திற்கு கொண்டு சென்று அவா் மூலம் அரசுக்கு பாிந்துரை செய்ய இன்று (08−05−2024) தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாக குழு உறுப்பிணா் அயிலை சிவசூாியன்,காவிாி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவா் பாலுதீட்சதா்,தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய பிாிவு மாநில பொருளாளா் கொத்தட்டை ராஜேந்திரன் தலைமையில் 30−க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சி தலைவா்களை சந்தித்து மனு கொடுக்க கூடினா்.
வெளிப்பணியில் இருந்த மாவட்ட ஆட்சி தலைவா் பிரதீப்குமார் விவசாயிகள் காத்திருப்பதை அறிந்து அலுவலகம் வந்து விவசாயிகளை சந்தித்து மனுவிணை பெற்று கொன்டு அரசுக்கு உாிய பாிந்துரை செய்வதாக உறுதி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu