திருச்சியில் விவசாயிகள் எருமை மாட்டிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்

திருச்சியில் விவசாயிகள் எருமை மாட்டிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்
X

திருச்சியில் விவசாயிகள் எருமை மாட்டிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் எருமை மாட்டிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும்.மழையினால் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் வரும் 26-ந்தேதி வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 29-ஆம் நாளான இன்று மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக கூறிவிட்டு பிரதமர் மோடி தராததால், கோரிக்கைகள் அடங்கிய மனுவை எருமை மாட்டுக்கு கொடுத்தும் அந்த எருமை மாட்டை தலைநகரம் டெல்லிக்கு அனுப்பி வைத்து மனுவை டெல்லியில் சேர்க்க கோருவதாகவும் கூறி நூதன போராட்டம் நடத்தினர்.

Tags

Next Story