திருச்சி அருகே சுங்கச்சாவடி முன் விவசாயிகள் படுத்து உருண்டு போராட்டம்

திருச்சி அருகே சுங்கச்சாவடி முன் விவசாயிகள் படுத்து உருண்டு போராட்டம்
X

திருச்சி அருகே சுங்கச்சாவடி முன் படுத்து உருண்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்.

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி அருகே சுங்கச்சாவடி முன் விவசாயிகள் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார்கள்.

டெல்லியின் எல்லைகளில், குறிப்பாக திகிரி மற்றும் சிங்கு எல்லைகளில், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யவேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்கவேண்டும், வேளாண்மை தொடர்பான வங்கி கடன்களை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த 13ம் தேதி தொடங்கிய அவர்களது போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. டெல்லிக்குள் நுழைய விடாமல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ரப்பர் குண்டு தாக்குதலில் ஒரு விவசாயி உயிரிழந்தார். இது நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி எல்லையில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான 2 விவசாயிகளுக்கு நீதி கேட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று காலை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து விவசாயிகள் டிராக்டர் மற்றும் வாகனங்களில் சுங்க சாவடி அருகே வந்து குவிந்தனர். அவர்களை முற்றுகையிட விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்தும் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!