திருச்சியில் விவசாயிகள் கோவணத்துடன் 2-வது நாள் உண்ணாவிரத போராட்டம்

திருச்சியில் விவசாயிகள் கோவணத்துடன் 2-வது நாள் உண்ணாவிரத போராட்டம்
X

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கோவணத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருச்சியில் விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து கோவணத்துடன் 2-ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க கோரியும், காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த 10 லட்சம் நெல் மூட்டைகளை தமிழக அரசு உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் இன்று காலை 2-ஆம் நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு நாங்கள் உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றிருக்கிறோம். இருந்த போதிலும் போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவு பெற்று டெல்லி சென்று போராட உள்ளோம். மேலும் நாளை தொடர் உண்ணாவிரத போராட்டமாக மூன்றாம் நாள் விவசாயிகள் சாக்கடையில் இறங்கி அங்கேயே படுத்து, சாக்கடை தண்ணீர் குடித்து எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம் என்றார்.

Tags

Next Story
the future of ai in healthcare