திருச்சி கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கத்தில் இன்று விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று ப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அய்யாக்கண்ணு பேசும்போது கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவதில் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குற்றம்சாட்டினார்.
இதேபோல விஸ்வநாதன் பேசும்போது மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களில் உள்ள கருவேல முள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி ஆக்கிரமிப்புகளையும் தயவு தாட்சண்யமின்றி அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவசாயிகள் கோரிக்கை வைத்துப் பேசினர். அவற்றிற்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு பதிலளித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமார், வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன் மற்றும் கூட்டுறவுத்துறை, மின்வாரியத் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu