டிசம்பர் 3-ம் தேதி திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

டிசம்பர் 3-ம் தேதி திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் 3-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் டிச.3-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள் ளது. கலெக்டர் சிவராசு தலைமை வகிக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடு பொருட்கள், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!