திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவராசு தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கடந்த காலங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து பயிர் இழப்பீடு குறித்தும், தங்களுடைய கிராமங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் தேவை குறித்தும் பேசினர்.

இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்சி மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த 64 நாட்களாக தன்னை வீட்டுக் காவலில் வைத்து இருப்பதாகவும், விவசாயிகளை டெல்லிக்குச் சென்று போராட ஏன் தடை விதிக்க வேண்டும் என்று அய்யாக்கண்ணு கேள்வி எழுப்பினார். மேலும் தனது வீட்டு முன் அமர்ந்திருக்க கூடிய போலீசாரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா