திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 7ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 7ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
X

 கலெக்டர் சிவராசு 

திருச்சி மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 7-ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். விவசாயிகள் இவ்வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
best ai tools for digital marketing