திருச்சியில் ஜூலை 5-ம் தேதி விவசாயிகள் பச்சைத்துண்டு பேரணி- மாநாடு

திருச்சியில் ஜூலை 5-ம் தேதி விவசாயிகள் பச்சைத்துண்டு பேரணி- மாநாடு
X
திருச்சியில் ஜூலை 5-ம் தேதி விவசாயிகள் பச்சைத்துண்டு பேரணி- மாநாடு நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஐந்தாம் தேதி உழவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் உழவர் தினத்தை முன்னிட்டு ஜூலை ஐந்தாம் தேதி திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பாக பச்சைத்துண்டு பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த பேரணியானது ஜூலை ஐந்தாம் தேதி பிற்பகல் மூன்று மணி அளவில் திருச்சி சாஸ்திரி சாலை மெகா ஸ்டார் திரையரங்கம் அருகில் இருந்து புறப்பட்டு தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தையை அடையும். பின்னர் அங்கு மாநில அளவிலான மாநாடு தொடங்கி நடைபெறும்.

இந்த மாநாட்டில் வங்கி கடன் ரத்து, விளைபொருட்களுக்கு உரிய விலை கோருதல், நீர்வழி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

மாநாட்டிற்கு மாநில தலைவர் பேராசிரியர் சின்னச்சாமி தலைமை தாங்குகிறார். திருச்சி மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை வரவேற்று பேசுகிறார். தீட்சிதர் பா. வழக்கறிஞர் கென்னடி முன்னிலை வகிக்கிறார்கள். மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!