திருச்சியில் விவசாயிகள் 4-வது நாளாக மண்டை ஓடுகளுடன் உண்ணாவிரதம்

திருச்சியில் விவசாயிகள் 4-வது நாளாக மண்டை ஓடுகளுடன் உண்ணாவிரதம்
X

திருச்சியில் விவசாயிகள் நான்காவது நாளாக மண்டை ஓடுகளுடன் போராட்டம் நடத்தினர்.

திருச்சியில் விவசாயிகள் 4-வது நாளாக மண்டை ஓடுகளுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ்பெற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வேண்டும்.மழையினால் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும்.உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர் பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்குதண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்சங்கம் சார்பில் திருச்சியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு போலீசில் அனுமதி கேட்டிருந்தார்.

ஆனால் போலீசார் இந்த உண்ணா விரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வில்லை.இதைதொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலதலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி அண்ணாமலை நகர் திருச்சி-கரூர் பைபாஸ் ரோட்டில், மலர்சாலையில் உள்ள அவரது வீட்டில்உண்ணா விரத போராட்டத்தை கடந்த12-ஆம் தேதி தொடங்கினர்.

நவம்பர் 26-ஆம் தேதி வரை 46நாட்கள் இந்த உண்ணா விரதபோராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில்4-வது நாளாக இன்று மனித மண்டை ஓடுகளை கையில் ஏந்தி உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare