டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் கருப்பு கொடி போராட்டம்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் கருப்பு கொடி போராட்டம்
X

அயிலை  சிவசூரியன்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

டெல்லியின் எல்லைகளில், குறிப்பாக திகிரி மற்றும் சிங்கு எல்லைகளில், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யவேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்கவேண்டும், வேளாண்மை தொடர்பான வங்கி கடன்களை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த 13ம் தேதி தொடங்கிய அவர்களது போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. டெல்லிக்குள் நுழைய விடாமல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ரப்பர் குண்டு தாக்குதலில் ஒரு விவசாயி உயிரிழந்தார். இது நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகளும் தற்போது களம் இறங்கி உள்ளனர் போராட்டங்கள் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் மீது காவல் துறையும்,துணை ரானுவ படையும் காட்டுமிரான்டி தனமான தாக்குதலை நடத்தி வருகிறது ,நேற்றைய போராட்டத்தில் 24−வயதுடைய இளம் விவசாயி சுப்கரன்சிங் என்பவர் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகிவுள்ளாா்.

மோடி அரசின் காவல்துறை,துணை ரானுவபடையின் கொலை வெறியை கண்டித்து நாடு முழுவதும் மாவட்ட தலைநகா்களில் கறுப்பு கொடி ஆா்ப்பாட்டம் நடத்த எஸ்கேஎம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. அதன் படி திருச்சியில் நாளை (23−02−2024) காலை 10.30−மணிக்கு திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் முன் திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பாக கருப்பு கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!