/* */

புகாரை வாபஸ் பெற மறுப்பு: ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்காததால் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த ஒன்றிய கவுன்சிலர் மற்றும் பஞ்சாயத்து தலைவர்.

HIGHLIGHTS

புகாரை வாபஸ் பெற மறுப்பு: ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
X

தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால், கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்த குடும்பம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் முசிறி தாலுக்கா மூவானூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி தனது கைக்குழந்தையுடன் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா மூவானூர் பகுதியில் உள்ள வேங்கை மண்டலத்தில் வசித்து வருகிறேன். கடந்த 8.4.2021 அன்று எனது கணவர் லோகநாதனுக்கும், மற்ற சிலருக்கும் இடையே நடந்த பிரச்சனை தொடர்பாக நான் புலிவலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு 74 /21 என்ற முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில் எனது மகனை கீழே தள்ளிவிட்டதால், அவனுக்கு கண்ணருகே காயம் ஏற்பட்டது. அப்போது கர்ப்பமாக இருந்த என்னையும் அடித்து வளையல்களை உடைத்து விட்டார்கள். மேற்கண்ட செயல்களை ஒன்றிய கவுன்சிலர் அவர்களின் தூண்டுதலின் பேரிலேயே நடந்தது.

அதன் பின்னர் ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், ஊர் பட்டையதார், ஒன்றிய கவுன்சிலர் உதவியாளர் ஆகியோர் மேற்கண்ட புகாரை சமாதானமாக செல்ல வற்புறுத்தினார்கள். நாங்கள் சமாதானமாக செல்ல மாட்டோம் என்று உறுதியாகச் சொல்லி விட்டோம். அப்போது மேற்சொன்ன சில நபர்களும் பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊர் பட்டயதார் ஆகியோர் எதிர்த்து இங்கு உங்களால் வாழ முடியாது.சமாதானத்திற்கு வாருங்கள் இல்லை என்றால் பின்னர் நடப்பது வேறு என்று மிரட்டி விட்டுச் சென்றார்கள்.

நாங்களும் பயந்து கொண்டு வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் கடந்த 11.8.2021 ஆம் தேதி அன்று ஊர் பட்டயதார் மற்றொருவர் எங்கள் வீட்டிற்கு வந்து உங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டோம். அதனால் நீங்கள் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நீங்கள் கொடுத்த வரிப் பணம் 10,000 ரூபாயை திருப்பிக் கொடுக்க சொல்லி விட்டார்கள் என்று எங்கள் வரிப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

இனிமேல் உங்கள் வீட்டில் நடக்கும் திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், ஒன்றிய கவுன்சிலர் உங்கள் மீது கோபமாக இருக்கிறார் என்று தெரிவித்தார். மேலும் மளிகை கடைக்கு, மெடிக்கல் கடைக்கு, பெட்ரோல் பங்கிற்கு, கோவிலுக்கு மற்றும் டீக்கடைக்கு நீங்கள் யாரும் செல்லக் கூடாது என்றும் உத்தரவு போட்டு உள்ளார்கள்.

இதனால் எங்கள் ஊரில் இனிமேல் வாழ முடியாத சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் மிகுந்த பயத்துடன், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். மேலும் எங்களுக்கு இரண்டு பையன்கள் மற்றும் கைக்குழந்தையுடன் உள்ளோம். இனிமேல் நாங்கள் எங்கள் ஊரில் வாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் வீட்டு மளிகை சாமான்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க மிகுந்த கஷ்டமாக உள்ளது.

எனவே, ஒன்றிய கவுன்சிலர் உதவியாளர் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்க மறுத்த ஒரே காரணத்திற்காக எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஒன்றிய கவுன்சிலர், ஊர் பஞ்சாயத்து, தலைவர் ஊர் பட்ட யதார், கவுன்சிலர் உதவியாளர் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்தவர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் நாங்கள் வாழ வழி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Updated On: 15 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு