போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது

போலி பாஸ்போர்ட்டில்   துபாய் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது
X

திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் திருச்சியில் இருந்து துபாய் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வாலிபரிடம் அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் தணிக்கை செய்து பார்த்ததில், பாஸ்போர்ட்டில் அவரது பெயர் முகமத் முஜிபூர் தந்தை பெயர் ரெய்னா முகமது‌ என போலி பெயர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குடியேற்ற தணிக்கை பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் போலியான பெயர் மற்றும் தந்தை பெயரை மாற்றி பாஸ்போர்ட் எடுத்து கொண்டு துபாய் செல்ல இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவரது உண்மையான பெயர் முஜிபூர் ரகுமான், தந்தை பெயர் அப்துல் காதர், சல்லி மலை, ராமநாதபுரம், மாவட்டம் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு வெளிநாடு செல்ல முயன்ற வாலிபர் மீது அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்