திருச்சியில் நடந்து சென்ற முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சியில் நடந்து சென்ற முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
X

திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சியில் முதியவரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி பெரிய கடைவீதி பெரிய சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 50). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த ஒரு வாலிபர் ராம்குமார் பாக்கெட்டில் இருந்து ரூ.250-ஐ பறித்து செல்ல முயன்றார். அப்போது அந்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில், அவர் வடக்கு தாராநல்லூர் நாகசுந்தரம் நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து மணிகண்டனை கைது செய்த போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்