சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.
அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11-ம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய புத்த பார்சி. மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவிகளிடமிருந்து 2021-22-ம் ஆண்டிற்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் www.scholarships. gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை கோரி மாணவர்களிடம் வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரி பார்க்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu