திருச்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
X
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் சமத்துவநாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத்தந்த பாரத ரத்னா டாக்டர். அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 - ஆம் நாளை ' சமத்துவ நாளாக ' கொண்டாடுவது என்று தமிழ்நாடு முடிவெடுத்துள்ளது என சட்டமன்ற விதி எண் .110 - ன் கீழ் அறிவித்தார்.

இதனை கருத்தில் கொண்டு அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 - ஆம் நாள் இன்று திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் முன்னிலையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை மேயர் வாசிக்க மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்களும் உடன் வாசித்து உறுதி மொழியினை எடுத்துக்கொண்டார்கள் .

முன்னதாக அண்ணல் அம்பேத்கர் திருவுருவப்படதிற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் பி.சிவபாதம்,ஜி.குமரேசன்,மண்டலக்குழுக்தலைவர்கள் ஜெயநிர்மலா, ஆண்டாள்ராம்குமார், உதவிஆணையர்கள் சண்முகம், பிரபாகரன், எஸ்.திருஞானம், செல்வபாலாஜி மற்றும் மாமன்றஉறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!