வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள், தங்களது பதிவு மூப்பினை மீண்டும் பெறும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மேற்கண்ட ஆண்டில் வேலை வாய்ப்பு அட்டையை புதுப்பிக்க தவறியவர்கள் 01-03-2022-க்குள், https://tnvelaivaaippu.gov.in வாயிலாகவோ, பதிவு தபால் மூலமாகவோ, அல்லது நேரிலோ வந்து மீண்டும் பதிவு செய்து புதுப்பித்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!