திருச்சியில் வருகிற 26-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் வருகிற  26-ம் தேதி தனியார்   துறை வேலைவாய்ப்பு முகாம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 26-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வருகின்ற 26-ஆம்தேதி (வௌ்ளிக்கிழமை) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. திருச்சி கண்டோன்மெண்ட் மாநகராட்சி அருகில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள், அனைத்து வகை ஐ.டி.ஐ, டிப்ளமோ, மற்றும் பி.ஈ, உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம். வயது வரம்பு 18 வயதிலிருந்து 35 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்கள், சுய விபரக்குறிப்பு ஆதார் கார்டு அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future