திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 19-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 19-ந்தேதி  வேலைவாய்ப்பு முகாம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19-ந்தேதி நடக்கிறது.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.பல்வேறு பணியிடங்களுக்கு தனியார் நிறுவனங்கள் பணிவாய்ப்புகள் வழங்க உள்ளன.

இவ்வேலை வாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு : 18-க்கு மேல் 35-க்குள்) கலந்து கொள்ளலாம். மேற்படி நேர் காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல், சுயவிவரக்குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
ai future project