திருச்சி கிருஷ்ணமூர்த்தி நகரில் அபாயகரமான நிலையில் மின் கம்பம்

திருச்சி கிருஷ்ணமூர்த்தி நகரில் அபாயகரமான நிலையில் மின் கம்பம்
X

அபாய நிலையில் மின்கம்பம்.

திருச்சி கிருஷ்ணமூர்த்தி நகரில் சரிந்து விழும் அபாயகரமான நிலையில் மின் கம்பம் இருப்பதால் அதனை அப்புறப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சியில் மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது.

திருச்சி மாநகராட்சி 58வது வார்டு கிருஷ்ணமுர்த்தி நகர் பகுதியில் உள்ள மின் கம்பம் எண் - K K W_418 - 33மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் கம்பி வெளியே தெரிகிறது.

அந்தப் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த மின் கம்பம் வழியாக தினமும் மக்கள் மற்றும் வாகனம் கடந்து செல்கிறார்கள். மின் கம்பம் உடைந்து எந்த நேரமும் விழும் அபாய நிலையில் சூழ்நிலையில் உள்ளது.

மேலும் மழை நேரங்களில் இந்த மின் கம்பம் மூலம் மின்சாரம் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டு உள்ளது.

சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் இதில் உடனடி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது