திருச்சி மாநகராட்சி நிதிக்குழு மற்றும் நகரமைப்பு குழு தலைவர்கள் தேர்வு

திருச்சி மாநகராட்சி நிதிக்குழு மற்றும் நகரமைப்பு குழு தலைவர்கள் தேர்வு
X

திருச்சி மாநகராட்சி நிதிக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துச்செல்வம், நகரமைப்பு குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மராஜ் மேயர் மற்றும் ஆணையருடன் உள்ளனர்.

திருச்சி மாநகராட்சி நிதிக்குழு தலைவராக முத்துச்செல்வம், நகரமைப்பு குழு தலைவராக தர்மராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையர் முஜிபுர்ரகுமான் தேர்தலை நடத்தினார்.

இதில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் பதவிக்கு தி.மு..க வை.சேர்ந்த தி. முத்துசெல்வமும், நகரமைப்பு குழு தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த இ.எம். தர்மராஜும் மனு தாக்கல் செய்தனர்.அவர்களை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டடதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களை ஆணையர் வழங்கினார்.

பின்னர் நிலைக்குழு தலைவர்கள் இருவரும் மேயர் அன்பழகன், துணைமேயர் திவ்யா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!