‘தி.மு.க.விற்கு தேர்தலில் பாடம்’ அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் எச்சரிக்கை
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் திருச்சி மண்டல பேரவைக்கூட்டம் திருச்சிதீரன் நகர் நலசங்க அரங்கில்,சங்கத்தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லட்சுமணன்(மாநிலத்தலைவர்) சிறப்புரையாற்றினார்.
ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர்கள் சங்கத்தலைவர் மாரிமுத்து வாழ்த்துரை வழங்கினார்.செயலாளர் கே.சம்பத் அறிக்கையும்,பொருளாளர் கே.மோகனசுந்தரம் வரவு-செலவு கணக்கையும் சமர்ப்பித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் பஞ்சப்படி உயர்வை அ.தி.மு.க. அரசு 2015- ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தியது. அப்போதைய எதிர்கட்சிகள் தலைவரான ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் 100- நாட்களில் பஞ்சப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்தார்.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இதனை உறுதிபடுத்தினர்.
100- நாட்களில் நிறைவேற்றுவதாக அளி்த்த வாக்குறுதியை, 21/2 வருடமாகியும் நிறைவேற்றாமலும், வாய் திறந்து எந்த பதிலை சொல்லாமலும் உள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியத்தை இருமுறையாக ரூ.15,000/-இருந்து ரூ.30,000/- ஆகஉயர்த்தி உள்ளதும்,பல்வேறு பிரிவினர்களின் பலக்கோரிக்கைகளை நிறைவேற்றி,பல கோடி ரூபாய் செலவிடும் நிலையில் ஓய்வூதியர்களை கண்டுகொள்ளாமல் வஞ்சிப்பத்தை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
இக்கோரிக்கையுடன் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான வாக்குறுதிகள் உட்பட பல ஓய்வூதியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை.மேலும், அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள்,மருத்துவ பணியாளர்கள் ஆகியோரும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தொடர்ந்து போராடி வருவதையும் தி.மு.க. அரசு கண்டு கொள்ளாத நிலையில்,அமைப்புரீதியில் திரண்டுள்ள அனைவரும்,நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அரசிற்கு பாடம் புகட்டும் வகையில், (வேறு யாருக்கும் வாக்களிக்காமல்)நோட்டாவிற்கு வாக்களிக்கும் வகையில் முடிவெடுக்க வேண்டும் என இந்த கூட்டம் அறைகூவல் விடுத்தது.
மூத்த குடிமக்களின் வழக்குகளை நீதிமன்றங்கள் முன்னுரிமை கொடுத்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும். உயர்நீதி மன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை நிறைவேற்றாமலும் உரிய காலத்தில் மேல் முறையீடு செய்யாமலும் காலந்தாழ்த்தும் அதிகாரிகளை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் எச்சரிக்கை செய்வதோடு நிறுத்தாமல்,சிறையில் அடைக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu