/* */

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
X

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தேர்தல் பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பகுதி கழக, ஒன்றிய, அணிகளின் நிர்வாகிகள் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில், கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டது.

இதில் பொதுக்குழு உறுப்பினர் குணா, ஒன்றிய பொறுப்பாளர் மாரியப்பன், சின்னஅடைக்கன், பகுதி செயலாளர்கள் மதிவாணன், மணிவேல், மோகன், டி பி எஸ்.எஸ்.ராஜ்முகமது மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு