திருச்சி காவிரி பாலத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் மற்றும் ஓவியம்
திருச்சி காவிரி பாலத்தில் 100சதவீத வாக்களிப்பு தொடரபாக வரையப்பட்ட ஓவியர் மற்றும் விழிப்புணர்வு வாசகத்தை கலெக்டர் பிரதீப்குமார் இன்று திறந்து வைத்தார்.
பாராளுமன்ற தோ;தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றுப் பாலத்தில் மிக பிரமாண்ட அளவில் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணா;வு வாசகம் மற்றும் ஓவியங்களை மாவட்ட தோ;தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (14.04.2024) பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி, ரங்கோலி கோலம் வரைதல், வாகனங்கள் மற்றும் குடிநீர் கேன்களில் விழிப்புணா;வு ஒட்டுவில்லைகளை ஒட்டுதல், 85 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று அழைப்பிதழ்கள் வழங்குதல், அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் வாக்காளர் கையேடு வழங்குதல், இராட்சத பலூன்களை பறக்க விட்டு விழிப்புணா;வு ஏற்படுத்துதல், தோட்டக்கலைத்துறையின் சார்பில் தானியங்கள், நறுமண பயிர்களான வெந்தயம், கசகசா மற்றும் கருஞ்சீரகத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு இலட்சினையை பொதுமக்களின் பாh;வைக்காக அமைத்தல் மற்றும் காய்கள், கீரை வகைகள் மற்றும் பழங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு இலட்சினை மற்றும் பழங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் செதுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுவது, பள்ளி மாணவிகளைக் கொண்டு ஹீலியம் பலூன்களை வானில் பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு, காவிரி ஆற்றுப் படுகையில் “மணல் சிற்பம் மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரம், விரலில் மை வைத்த சிற்பம் ஆகியவற்றை மணற் சிற்பமாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தேர்தல் இலட்சினையை பொதுமக்கள் பார்வைக்கு வண்ண விளக்குகளுடன் ஒளிரச்செய்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர;வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து, நடைபெற்று வருகின்றது.
அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று (14.04.2024) திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றுப்பாலத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மிக பிரமாண்ட அளவில் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகம் மற்றும் ஓவியங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (14.04.2024) பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் சரவணன, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி, துணை ஆட்சியர் வேலுமணி, மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர்(பொது) அதியமான் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu