திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பங்கேற்று பேசினார்.
பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (05.04.2024) தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
இந்தியத் தேர;தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக மாவட்ட தோ;தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து, நடைபெற்று வருகின்றது.
அதனடிப்படையில் இன்று (05.04.2024) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் டோலாஸ் செவிதிறன் குறைபாடுடையோருக்கான உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள காதுகேளாதோருக்கான மற்றும் வாய்பேச இயலாதோருக்கான மாதிரி வாக்குச்சாவடி மையத்தையும் அதன் செயல் விளக்க முறைகளையும்;நேரில் பார்வையிட்டார். மேலும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாற்றுத்திறன் மாணவர்களால் வரையப்பட்ட ஓவியங்கள், கோலங்கள் மற்றும் வினாடி - வினா நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டு வாக்காளர்விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற தேர்தலில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெற்ற தேர்தல் விழி;ப்புணர்வு நிகழ்ச்சியில் 100 சதவீதம்; வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவா;கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, வாக்காளர்களுக்கு விழிப்புணா;வு ஏற்படுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டும், தேர்தல் ஆணைய இலட்சினை வடிவில் மற்றும் ஏழவந100சதவீதம் எனும் வடிவில் மாணவா;களின் விழிப்புணா;வு ஏற்படுத்தும் நிகழ்;வினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
மேலும் தேர்தல் விழி;ப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும், குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிப்பதுடன், வாக்களிப்பதன் அவசியத்தை உங்களின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எடுத்துரைத்து அவர்களையும் வாக்களிக்க செய்ய வேண்டும் என தெரிவித்து, மாணவர்களின் தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பதிலளித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வுகளில். துணை ஆட்சியர் வேலுமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரமோகன், உதவி திட்ட அலுவலர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu