திருச்சியில் வேலையில்லாத விரக்தியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் வேலையில்லாத விரக்தியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை
X
திருச்சியில் வேலையில்லாத விரக்தியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 65). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெரியகடை விதி பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்தார்.

தற்போது அவர் வேலையில்லாமல் கஷ்டத்தில் இருந்துள்ளார்.இதனால் மனமுடைந்த சோமசுந்தரம் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த கோட்டை போலீசார் சோமசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!