திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.

திருச்சி மத்திய பஸ் நிலையம் தமிழ்நாடு ஓட்டல் எதிரே உள்ள சாலையில் நடந்து சென்றவர் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தவர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவலறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்தவர் திருச்சி மாவட்டம் பூலான்குளத்துப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த திருப்பதி (வயது 50) என்பது தெரியவந்தது. இதையடுத்து தகவலின் பேரில் திருப்பதி மனைவி புண்ணியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து திருப்பதி மீது மோதிய வாகனம் எது என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!