மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவர் கைது

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவர் கைது
X

பைல் படம்.

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பாலக்கரை கீழ படையாச்சி தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது67). இவர் உறவுக்கார பெண் மாற்றுத்திறனாளி ஆவார். இந்த பெண்ணின் தாய், தந்தை, அக்கா ஆகியோர் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் மாற்றுத்திறனாளி பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த ராஜ், அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ராஜ் மீது கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!