திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம்

திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம்
X
திருச்சி பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில் மாணவர் ஒருவர் மரம் போன்ற ஆடை அணிந்து வந்தார்.
திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியில் இன்று பசுமை தினம் மற்றும் காமராஜரின் பிறந்ததினத்தையொட்டி கல்வி வளர்ச்சி நாள் விழா பள்ளியின் தாளாளர் எட்வின் பால்ராஜ் , தலைமையில், பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ். கவிதா முன்னிலையில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் கலந்து கொண்டு பேசும்போது மரங்களை வளர்த்து பாதுகாக்க வேண்டும், மனிதர்களை தவிர மற்ற உயிரினங்கள் இயற்கையை பாதுகாக்கின்றன. பறவைகள், விலங்குகள் அனைத்தும் பசுமையை பாதுகாக்கின்றன. எனவே மாணவர்களாகிய நீங்கள்தான் வருங்காலத்தில் இயற்கையை பாதுகாக்க வழிவகுக்க வேண்டும் என்றார்.

நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு பசுமையான உணவுகள் , கீரை, பட்டாணி, பச்சைபயிர், புதினா சாதம் போன்ற உணவுகள் வழங்கப்பட்டது. அத்துடன் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பச்சை நிறத்தில் ஆடைகள் அணிந்து வந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture