எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
X

திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவினை நலத்திட்ட உதவிகள் வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாடினார்கள்.

திருச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவை அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழாவை இன்று மே௧௨ அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடினார்கள்.

அந்த வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக பொருளாளர் சேவியர், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் பிரியா சிவகுமார், சரோஜா இளங்கோவன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பேரூர் கண்ணதாசன், புல்லட் ஜான், அன்பு பிரபாகரன், ஏவூர் நாகராஜன், முசிறி நகர கழக செயலாளர் சுப்ரமணியன், ஒன்றிய கழக செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், நடராஜன், ஆமூர் ஜெயராமன், ராம்மோகன், பால்மணி, பிரகாஷவேல், அழகாபுரி செல்வராஜ், ஜெயக்குமார், ஆதாளி, கடிகை ராஜகோபால் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கட்சி சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business