எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டி பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை

எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டி பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை
X

எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக வேண்டி துவரங்குறிச்சி மசூதியில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டி திருச்சி அருகே பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் அ.தி.மு.க. இ.பி.எஸ். அணி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி என இரண்டாக பிளவு பட்டது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறும் எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இது தொடர்பாக நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த போது தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தொடரலாம் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற முதல் விசாரணையின் போது இந்த வழக்கு முடியும் வரை எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்தி பொதுச் செயலாளராக தன்னை தேர்ந்தெடுக்க கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் வருகிற பத்தாம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அவர் கூட்டி உள்ளார். எப்படியாவது அ.தி.மு.க.வை கைப்பற்றி பொதுச் செயலாளராக தொடர வேண்டும் என்பதில் அவர் முனைப்புடன் உள்ளார். அதே நேரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி எப்படியாவது மீண்டும் பதவிக்கு வந்து விடலாம் என ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார்.கட்சியை கைப்பற்றுவதில் இவர்கள் இருவருக்கும் இடையே நிலவி வரும் இந்த போட்டி அ.தி.மு.க. தொண்டர்களிடம் பல கேள்விக்குறிகளை எழுப்பி உள்ளது. இரண்டு பேரும் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்களது ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்கள். கோவில் உள்பட முக்கிய வழிபாட்டுத் தலங்களிலுமா பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகையின் தொடர்ச்சியாக 34வது மாவட்டமாக திருச்சி மாவட்டம் இன்று துவரங்குறிச்சி பாபா பக்ருதீன் மசூதியில் அ.இ.அ.தி.மு.க. அவைத்தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் ப.குமார் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் சந்திரசேகர், சேது, ராவணன், பழனிசாமி, ராஜாராம், அன்பரசன், மற்றும் மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, துணை செயலாளர் சுபத்ரா, பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுகுழு உறுப்பினர் இஸ்மாயில், நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன், பேரூராட்சி செயலாளர் திருமலை சாமிநாதன், ஜேக்கப், அணி செயலாளர்கள் டோமினிக், அழகர்சாமி, முருகன் ராஜமணிகண்டன், கார்த்திக், சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர் .

Tags

Next Story
ai in future agriculture