திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு
X

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் இன்று கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் இன்று ஆய்வு செய்துள்ளார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், எடமலைபட்டிபுதூர் காவல்நிலையத்தை இன்று (05.01.2022)-ந்தேதி ஆய்வு செய்தார். அப்போது காவல் நிலைய கோப்புகளை ஆய்வு செய்தும் காவல் நிலையத்தில் பராமரிக்கபட வேண்டிய கோப்புகளை பற்றி தக்க அறிவுரை வழங்கியும், நிலுவையில் உள்ள வழக்குகளின் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தக்க அறிவுரை வழங்கினார்.

பின்னர் காவல் நிலையத்தை சுற்றி பார்வையிட்டும், கொரோனா காலங்களில் காவல் நிலையத்தை சுத்தம் மற்றும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள காவல் ஆய்வாளருக்கு தக்க அறிவுரை வழங்கினார். மேலும் காவல் ஆளினர்கள் தங்களையும், தங்களது குடும்பத்தரையும் கொரோனா காலங்களில் தற்காத்துக்கொள்ளவும். முகக்கவசம் அணிந்து பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார்.


மேலும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சம்பந்தமாக காவல் ஆய்வாளர், காவல் ஆளினர்கள் மற்றும் ரோந்து காவலர்கள் பொதுமக்களிடையே கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுரை வழங்கியும், பின்னர் எடமலைபட்டிபுதூர் காவல் நிலையம் அருகில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கியும், முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை பற்றிய அறிவுரை வழங்கி சென்றார்.

மேலும், திருச்சி மாநகரில் முனைப்புடன் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story