திருச்சி சரகத்தில் அதிரடி சோதனை: 245 வழக்கு பதிவு - 243 பேர் கைது

திருச்சி சரகத்தில் அதிரடி சோதனை: 245 வழக்கு பதிவு -  243 பேர் கைது
X
போதை மற்றும் புகையிலை பொருட்கள் தொடர்பாக, திருச்சி சரகத்தில் நடைபெற்ற சோதனையில், 245 வழக்குகள் பதிந்து, 243 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் அறிவுரையின் பேரில், திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் புகையிலை மற்றும் போதை வஸ்துக்கள் ( Gutkha ) சம்மந்தமாக கடந்த 2,ஆம் தேதி, சிறப்பு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில், திருச்சி சரகத்தில் மொத்தம் 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ( திருச்சி -84 , புதுக்கோட்டை 43 , கரூர் -33 , பெரம்பலூர் -23 மற்றும் அரியலூர் -62 ) பதிவு செய்யப்பட்டு, 243 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 1 லட்சத்து 53 ஆயிரத்து 573 மதிப்புள்ள, சுமார் 93.500 கிலோ புகையிலை மற்றும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!