திருச்சி மண்டலத்தில் போதைப் பொருள்களை கண்டறிவதற்காக புதிய நாய்க்குட்டி

திருச்சி மண்டலத்தில் போதைப் பொருள்களை கண்டறிவதற்காக புதிய நாய்க்குட்டி
X

திருச்சி மத்திய மண்டலத்தில் புதிதாக வரவழைக்கப்பட்டுள்ள நாய்க்குட்டி

திருச்சி மத்திய மண்டலத்தில் போதைப் பொருள்களை கண்டறிவதற்காக ரூ.25 ஆயிரம் செலவில் புதிய நாய்க்குட்டி வாங்கப்பட்டு உள்ளது.

திருச்சி மத்திய மண்டலத்தில் போதைப் பொருள்களை கண்டறிவதற்கான பிரத்தியேக குணம் கொண்ட நாய் ஒன்று தற்போது புதிதாக வாங்கப்பட்டுள்ளது.

லேபிரடார் கோல்டன் ரிட்ரீவர் என்ற வகையைச் சேர்ந்த அந்த நாய்க்குட்டி ஊட்டி குன்னூரில் இருந்து வரவழைக்க பட்டுள்ளது.

ரூ.25 ஆயிரம் செலவில் கொண்டு வரப்பட்டு உள்ள அந்த செல்ல நாய்குட்டிக்கு "பாண்ட்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாய்க்குட்டிக்கு திருச்சியில் 3 மாதம், கோவையில் 6 மாதம் என மொத்தம் 9 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. முதலில் அடிப்படை பயிற்சியும், அதன் பின்னர் மோப்ப அறிவு பயிற்சியும் அதற்கு அளிக்கப்பட உள்ளதாம். இந்த நாயின் பயிற்சியாளர்களாக ரமேஷ், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story