லாரி மோதி இளைஞர் இறந்த வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

லாரி மோதி இளைஞர் இறந்த வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை
X

திருச்சி நீதிமன்றம் (பைல் படம்)

லாரி மோதி இளைஞர் இறந்த வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம் லால்குடி பக்கம் உள்ள திருமண மேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் மருதை (வயது28).இவர் கடந்த 31 -1 -2018 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி டூவீலர் மீது மோதியது .இதில் மருதை படுகாயமுற்று உயிரிழந்தார். திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டம் காரமடையைச் சேர்ந்த ஆனந்தன் (31) என்பவரை கைது செய்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தனுக்கு இரண்டு வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

இதே கோர்ட்டில் நடைபெற்ற இன்னொரு விபத்து தொடர்பான வழக்கில் இறந்தவர் இருளப்பன்( வயது 65). திருச்சி ஏர்போர்ட் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் சென்ற போது பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பட்டியை சேர்ந்த குருச்சந்திரன் (31) என்பவர் ஓட்டி வந்த லாரி மோதியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குரு சந்திரனுக்கு ஒரு வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!