திருச்சி மாநகரில் ஆகஸ்ட் 21ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகரில் ஆகஸ்ட் 21ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
X
திருச்சி மாநகரில் ஆகஸ்ட் 21ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 20.08.2024 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், திருச்சியில் குடிநீர் விநியோகம் 21.08.2024 அன்று ஒருநாள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 20.08.2024 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 21.08.2024 ஒருநாள் இருக்காது. 22.08.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்